இவரும் நமது கேப்டன் தான் வாழ்த்தலாமே!...  ‘ஹேப்பி பர்த் டே’ சுனில் சேத்ரிSponsoredஇந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கங்குலி, தோனி, கோலி ஆகியோரின் பிறந்தநாளை விரல் நுனியில் வைத்திருக்கும் விளையாட்டு ரசிகர்களே.. இன்று ஒரு விளையாட்டு வீரர் அதுவும் இந்திய அணியின் கேப்டனின் பிறந்தநாள். அவர் யார் என்று யூகிக்க முடிகிறதா?. கிரிக்கெட் என்ற மாய உலகை விட்டு வெளிவராதவர்களுக்கு அவர் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Photo Credit: https://twitter.com/IndianFootball

Sponsored


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு தான் இன்று பிறந்தநாள். தற்போதைய தெலங்கானா மாநிலத்தில் ஆகஸ்ட் 3, 1984-ல் பிறந்தவர் தனது 34வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரின் தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதால் பல்வேறு நகரங்களின் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டுள்ளார். சுனிலின் தந்தை, தாய் இருவருமே கால்பந்து வீரர்கள். அவரது தந்தை இந்திய ராணுவ கால்பந்து அணியிலும் தாய் அஸ்ஸாம் தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடியுள்ளார். அதன்காரணமாகவே இவரது கால்கள் கால்பந்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தனது 17வயதில் டெல்லியில் தனது கால்பந்து பயணத்தை தொடங்கினார். இந்திய வீரர்கள் முகமது சலீம் மற்றும் பூட்டியாவுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு கிளப் போட்டிகளில் இடம்பெற்ற மூன்றாவது நபர் இவர். 2007, 2009, 2012-ம் ஆண்டுகளில் நேரு கோப்பை வென்று இந்திய அணிகளில் இடம்பெற்றிருந்தார். 

Sponsored


இந்திய அணிக்காக 101 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி 64 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் ரெனால்டோவுக்கு அடுத்தபடியாக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் சுனில் சேத்ரி.  ஆனால் இதனை ஒரு பெருமையாகவோ கர்வமாகவோ அவர் ஒருபோதும் எண்ணியதே இல்லை.இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுகையில் ’மெஸ்சி, ரொனால்டோவுடன் என்னை நான் ஒப்பிட்டதே இல்லை. அவர்கள் சாதித்த அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை ’ என்றார் அடக்கத்துடன். இந்திய அணியின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டிருப்பவர் தான் சேத்ரி. இனியபிறந்த நாள் வாழ்த்துகள்  சுனில் சேத்ரி உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்.  
 Trending Articles

Sponsored