இந்திய அணி வெற்றிபெற 194 ரன்கள் இலக்கு; விறுவிறுப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!Sponsoredஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூட் 80 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இந்தியா, 274 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 149 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. 

Sponsored


இரண்டாம் நாளின் இறுதியில் அஷ்வின், குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. அஷ்வின் மற்றும் முகமது ஷமி தங்களது பந்துவீச்சைத் தொடர்ந்தனர். இந்தப் போட்டியில் அஷ்வின் தன் சிறப்பான பந்துவீச்சைத் தொடர்ந்தார். இதனால் இங்கிலாந்து வீரர்கள் ரன்கள் எடுக்க சிரமப்பட்டதோடு, தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவரது பந்துவீச்சில் ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். அதன் பின்னர் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரூட் 14 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து டாப் ஆர்டரை அஷ்வின் காலி செய்துவிட்டார். இதன் பின்னர் இஷாந்த் நடுவரிசையை காலிசெய்ய, இங்கிலாந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 87 ரன்னுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அதன் பின்னர் குர்ரான்  கடைசி கட்ட வீரர்களுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். குர்ரான் 63 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அஷ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored