`சொதப்பிய ஓப்பனிங்; நிலைத்து நின்ற விராட்' - வெற்றியை நெருங்கும் இந்திய அணி! Sponsoredஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 110 ரன்கள் குவித்தது. இந்திய அணி வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படுகிறது.

@icc

Sponsored


இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இந்தியா, 274 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 149 ரன்கள் எடுத்தார். அதையடுத்து இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் கலக்கிய அஷ்வினோடு சேர்ந்து இஷாந்த் சர்மாவும் தன் பங்குக்கு அசத்தினார். இதனால் இங்கிலாந்து வீரர்கள் ரன்கள் எடுக்கச் சிரமப்பட்டதோடு, தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஷ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

Sponsored


இதற்கிடையே 194 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் ஆகிய தொடக்க வீரர்கள் கைகொடுக்கத் தவறினர். 6 ரன்களுக்கு பிராட் ஓவரில் எல்பி மூலம் முரளி விஜய் வெளியேற அதற்கடுத்த ஓவரிலேயே அதே பிராட் ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தவான் நடையைக் கட்டினார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்ற, ரகானேவும், அஷ்வினும் ஏமாற்றம் தந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்றார் கேப்டன் கோலி. அவர் இங்கிலாந்து பௌலர்களை சமாளித்து விளையாடினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இந்திய அணி வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் நாளை இந்தியா வெற்றிவாகை சூடும்.Trending Articles

Sponsored