இறுதி வரை போராடிய ஹர்திக் பாண்ட்யா - இங்கிலாந்து அணி `த்ரில்’ வெற்றி!இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாகக் கோலி 51 ரன்கள் எடுத்தார்.

Sponsored


Photo: ICC/Twitter

Sponsoredஇந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதை அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூட் 80 ரன்கள் எடுத்தார். அஷ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

Sponsored


Photo: ICC/Twitter

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாகக் கேப்டன் கோலி 149 ரன்கள் எடுத்தார். 13 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இஷாந்த் ஷர்மா மற்றும் அஷ்வின் பந்துவீச்சில் கலக்க இங்கிலாந்து அணி 180 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் 5 விக்கெட்டுகளும் அஷ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி வெற்றிபெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

Photo: ICC/Twitter

முன்வரிசை ஆட்டகாரர்கள் சொதப்ப, கோலி தனி ஒருவராகப் போராடினார். 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்தது. இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கும்போது இந்திய அணி வெற்றிபெற 84 ரன்கள் தேவை. இங்கிலாந்து அணிக்கு 5 விக்கெட்டுகள் தேவை. இந்த நாளின் தொடக்கத்திலே தினேஷ் கார்த்திக் 20 ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். நம்பிக்கை அளித்து வந்த கோலி அரைசதம் அடித்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஷமியும் ஆட்டமிழக்க, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. இஷாந்த் ஷர்மா 11 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் நம்பிக்கை கூடியது. இறுதிவரை போராடிய ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி வெற்றிபெறக் கடைசி வரை வாய்ப்பிருந்தும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இந்தியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 

5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 2 வது டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. Trending Articles

Sponsored