உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



Sponsored



சீனாவின் நான்ஜிங் நகரில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்கள் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. ஆறாவது நாளான நேற்று நடைபெற்ற மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3 ஆம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து உலகின் 2 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். 55 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அகனேவின் கையே ஓங்கியிருந்தது. முதல் செட்டில் அகனே 5 புள்ளிகள் எடுக்கும்வரை பி.வி.சிந்து பூஜ்யம் புள்ளியில்தான் இருந்தார். பின் படிப்படியாக புள்ளிகளை வென்ற சிந்து 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அகனேவே முன்னிலை வகித்தார் 19-12 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கியிருந்த சிந்து அதன் தொடர்ச்சியாக புள்ளிகளை வென்றார். ஒருகட்டத்தில் 22-22 என மிக நெருக்கடியான கட்டத்திற்கு சென்றது. அதன்பின் 24-22 என இரண்டாவது செட்டையும் போராடிக் கைப்பற்றினார் பி.வி.சிந்து. அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளார். கடந்த பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்போது இறுதிச்சுற்றில் தோற்ற நொசாமியை இந்தத் தொடரில் காலிறுதியிலேயே வெளியேற்றிவிட்டார். 

2018 ஆம் ஆண்டின் உலக பேட்மின்டன் சாம்பியன் தொடரில் எல்லாப் பிரிவுகளையும் சேர்த்து இந்தியாவில் இருந்து பி.வி.சிந்து மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சாய்னா, ஶ்ரீகாந்த் என பல முன்னணி வீரர்களும்  தோல்வி அடைந்த நிலையில் சிந்து மட்டும் நம்பிக்கையளித்துள்ளார். இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்ளவிருக்கிறார். இவர்தான் காலிறுதியில் சாய்னாவை வெளியேற்றினார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் பி.வி.சிந்துவும் கரோலினாவும் மோதியுள்ளனர். அந்தப் போட்டியில் கரோலின் வெற்றி பெற்றார். அதனால் இறுதிச்சுற்றுக்கு நிறைய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. சிந்து தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையும் அதிகமாயிருக்கிறது. 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored