மகுடம் சூடிய கோலி.... அரியணையை பறிக்கொடுத்த ஸ்மித்Sponsoredஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

Photo Credit: BCCI

Sponsored


இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அனைவரின் பார்வையும் கோலி மீது உள்ளது. கோலி கடந்த கால இங்கிலாந்து டூரில் மோசமாக விளையாடி இருந்தார். எனவே இந்தத் தொடரில் கோலி சாதிப்பாரா? சறுக்குவாரா? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட கோலி அதே ஃபார்மில் டெஸ்ட் தொடரிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்மேன்களுக்கான தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 32 மாதங்களாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதலிடத்தில் இருந்தார். தற்போது பால் டெம்பரிங் விவகாரத்தால் ஒரு வருடம் ஸ்மித் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Sponsored


கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துள்ளார். மேலும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள ஏழாவது இந்திய வீரர் கோலி. இதற்கு முன்பு, திலீப் வெங்சர்கர், சேவாக், சுனில் கவாஸ்கர், காம்பீர், ராகுல் டிராவிட், டெண்டுல்கர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், கோலி முறையே, 149,51 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது 934 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அதிக புள்ளிகள் பெற வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஹைடன், காலிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனைகளை பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது. இவர்களின் அதிகப்பட்ச புள்ளிகள் 935 ஆகும். அதிகபட்சமாக பிராட்மேன் (961), ஸ்டீவ் ஸ்மித் (947) புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களில் உள்ளனர்.Trending Articles

Sponsored