‘பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள் உள்ளது’ - கொதிக்கும் விரேந்திர சேவாக்Sponsoredகுழந்தைகளின் பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள் இருப்பதாக கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். 

இந்தியஅணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். கிரிக்கெட் மட்டுமல்லாது சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களில் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

Sponsored


இந்நிலையில், பாடப்புத்தகத்தில் குடும்பங்களின் வகைகள் என்ற தலைப்பில் சிறிய குடும்பம், கூட்டுக்குடும்பம் ஆகிய இரண்டு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூட்டுக் குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் பல குழந்தைகள் இருப்பார்கள். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Sponsored


இதைப் புகைப்படம் எடுத்து இதன் மீதான கருத்தை சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் இது போன்று நிறைய தவறான விஷயங்கள் உள்ளது. இதை மறுமதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தங்களின் வேலைகளைச் சரியாக செய்யவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.Trending Articles

Sponsored