சி.எஸ்.கே வீரர் தீபக் சஹாரின் சகோதரி மால்தியின் அடுத்த அசத்தல்! - வைரல் வீடியோSponsoredநடிகர் விஜய் நடித்த `கில்லி' படத்தின் `அப்படிப்போடு' பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார் கிரிக்கெட் வீரர் தீபக் சஹார் சகோதரி மால்தி சஹார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார். கடந்த சீசனில் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி எதிரணியைக் கலங்கடித்தார். தொடர்ந்து ஐ.பி.எல்லில் அசத்தியதால் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐ.பி.எல் போட்டிகளில் தீபக்கின் ஆட்டத்தைவிட ரசிகர்களில் அதிக கவனம் ஈர்த்தது அவரின் சகோதரி மால்தி சஹார். தீபக் சிக்ஸ் அடிக்கும்போதும் விக்கெட் எடுக்கும்போதும் மால்தி கொடுத்த ரியாக்ஸன்களில் சென்னை ரசிகர்கள் வீழ்ந்தனர். இதனால் ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் அவரை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். அவர் குறித்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.

Sponsored


இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் தமிழ்நாட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அதுவும் குறிப்பாக விஜய் ரசிகர்களை அவர் குஷிப்படுத்தியுள்ளார். ஆம், எப்போதும் சமூகவலைதளங்களில் வித்தியாசமாக செய்து வரும் அவர், தற்போது நடிகர் விஜய் நடித்த `கில்லி' படத்தின் `அப்படிப்போடு' பாடலுக்கு அசத்தலாக நடனமாடி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில், பாடலுக்கு ஏற்ப அவர் ஆடிய நடனம் விஜய் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. இதனால் அவரின் வீடியோவை 2000-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். மேலும், விஜய் ரசிகர்கள் மால்தியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கொண்டாடி வருகின்றனர்.  

Sponsored
Trending Articles

Sponsored