மிரட்டிய மழை! - ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டின் முதல்நாள்Sponsoredஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Photo credit: Twitter/HomeOfCricket

Sponsored


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்குப் பின்னர் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் காலை முதலே லேசான மழை தொடர்ந்து வந்தது. இதனால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக டாஸ் போடவில்லை. மழை தொடர்ந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் மதிய உணவு இடைவெளி விடப்பட்டது. இருப்பினும், மாலை வரை மழை தொடர்ந்ததால், முதல் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

Sponsored


இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்திய அணி களமிறங்கும் சூழலில் முதல் நாள் கைவிடப்பட்டிருக்கிறது. முதல் போட்டியில் புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்காதது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் புஜாரா சேர்க்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. 
 Trending Articles

Sponsored