எந்த இடத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் கோலி..! ஸ்டீவ் வாக் புகழாரம்Sponsoredஉலக அரங்கில் மற்ற கிரிக்கெட் வீரர்களிடம் இல்லாத சிறந்த நுட்பங்கள் விராட் கோலியிடம் உள்ளன என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் குறித்து பேசியுள்ளார். அவர், 'கோலி எந்தச் சந்தர்ப்பத்திலும் விளையாடக் கூடிய வீரர். எந்த இடத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். உலகில் கிரிக்கெட் வீரர்கள் யாரிடமும் இல்லாத சிறந்த நுட்பம் விராட் கோலியிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். விராட் கோலியிடமும், ஏபி டிவில்லியர்ஸிடமும் அந்த நுட்பம் உள்ளது. ஆனால், ஏபி டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால், விராட் கோலி ஸ்டேன்ட் அவுட் வீரராக உள்ளார். அவர், பிரைய்ன் லாரா, சச்சின், ரிச்சர்ட்ஸ், ஜாவேத் மியான்தத் போன்ற வீரர்களைப் போன்றவர் கோலி' என்று பாராட்டியுள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored