தவான், உமேஷுக்குப் பதில் புஜாரா, குல்தீப்! - லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து ஃபீல்டிங் தேர்வுஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் புஜாரா, குல்தீப் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

Sponsored


Photo Credit: Twitter/@bcci

Sponsored


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20ஐ கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இழந்தது. இதன் பின்னர், 5 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நழுவவிட்டது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே, நேற்று காலை முதலே லேசான மழை தொடர்ந்தது. இதனால், டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Sponsored


இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்று மழை பெய்யாததால் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக சொதப்பலாக ஆடிவந்த ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். Trending Articles

Sponsored