ஜேம்ஸ் ஆண்டர்சன் அசத்தல் பந்துவீச்சு..! 107 ரன்களில் சுருண்ட இந்திய அணிஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

Sponsored


இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.  முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், புஜாரா ஒரு ரன்னிலும், லோகேஷ் ராகுல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Sponsored


Sponsored


13 ரன்களில் 3 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கோலி 23 ரன்களிலும், ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக அஸ்வின் 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 35.2 ஓவருக்கு 107 ரன்கள் எடுத்து அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Trending Articles

Sponsored