”வீரர்களைத் தேர்வுசெய்ததில் தவறு உள்ளது” - லார்ட்ஸ் தோல்விகுறித்து கேப்டன் கோலிSponsoredஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 'உமேஷ் யாதவ்-வுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்வை எடுத்தது தவறான முடிவு' என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிக மோசமான தோல்வியடைந்துள்ளது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Sponsored


அதனால், இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்கே திணறியது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, 'இந்திய அணி வீரர்களைத் தேர்வுசெய்ததில் தவறு உள்ளது. உமேஷ் யாதவ்-வுக்குப் பதிலாக குப்தீப் யாதவ்வை எடுத்தது தவறான முடிவாகும். ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் விளையாடிய முறையை நினைத்து பெருமைப்பட முடியவில்லை. இந்தப் போட்டி, நாங்கள் தோற்பதற்கு உரிய போட்டிதான். மழை பெய்ததால், மைதானத்தின் தன்மை மாறியுள்ளது என்று காரணம் சொல்ல முடியாது.

Sponsored


இங்கிலாந்து அணியினர், மைதானத்தில் வெறித்தனமாக விளையாடினார்கள். அதனால், அவர்கள் வெற்றி பெறுவதற்குத் தகுதியானவர்கள். நீங்கள், விளையாடிக்கொண்டிருந்தால், உண்மையில் மைதானத்தைப் பற்றி சிந்தனை செய்ய மாட்டீர்கள். உட்கார்ந்திருந்து மைதானத்தைப் பற்றி யோசிக்க முடியாது. சில நேரங்களில் மைதானங்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்காது. நாம், சரியான இடத்தில் பந்து வீசினாலும், சரியாக பவுன்ஸ் ஆகாது. இன்னும் ஒருசில நாள்களில் என்னுடைய உடல்நலம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார். Trending Articles

Sponsored