லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ட்ரெண்டிங் ஸ்டார் அடில் ரஷித்தான்! - அப்படி என்ன செய்தார்? #EngvIndஇங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் தான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ட்ரெண்டிங் ஸ்டார். அப்படி என்ன செய்தார் அவர்?

Sponsored


இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்ற நிலையில் லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் சேர்த்ததே தோல்விக்குக் காரணம் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். 

Sponsored


இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்  ரஷித் லார்ட்ஸில் நடைபெற்றப் போட்டியில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. அதாவது அவர் ஒருபந்துகூட வீசவில்லை. இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் ரஷித் பேட் செய்யவில்லை. அதனால் அவர் ஒருபந்துகூட சந்திக்கவில்லை இந்திய அணி இரண்டு இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, களத்தில் ரஷித் இருந்தும் அவர் கேட்ச் எதுவும் பிடிக்கவில்லை. ரன் அவுட்டிலும் அவரின் பங்களிப்பு இருக்கவில்லை. மொத்தத்தில் இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியில் அடில் ரஷித் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. இந்தப் போட்டிக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம், 14,000 யூரோ. அதாவது இந்திய மதிப்பில் 11 லட்சம் ரூபாய். களத்தில் 3 நாள்கள் நடப்பதுக்கு 11 லட்சம் சம்பளமா என அடில் ரஷித் தான் இப்போது ட்ரெண்டிங். 

Sponsored


141 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னாள் இதுபோன்று 13 முறை நடந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை. கடைசியாக 2005-ம் ஆண்டில் கரேத் பேட்டி என்ற இங்கிலாந்து வீரரின் பங்களிப்பு இல்லாமல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்  இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   Trending Articles

Sponsored