இலங்கையின் இம்ரான் கான்? - அரசியல் என்ட்ரி குறித்து சங்ககாரா விளக்கம்Sponsoredஅரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான செய்திகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா விளக்கமளித்திருக்கிறார். 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்ககாரா, விரைவில் அரசியலில் களமிறங்கப்போவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுடன், சங்ககாராவை ஒப்பிட்டும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர் வெற்றிகரமாக அரசியலில் இருப்பதை மேற்கோள் காட்டியும் அந்தச் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. 

Sponsored


இந்தநிலையில், அரசியல் என்ட்ரி குறித்து குமார் சங்ககாரா விளக்கமளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அரசியலில் களமிறங்கும் எந்த லட்சியமும் எனக்கு இல்லை. நான் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. இப்போது மட்டுமல்ல, எப்போதும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை’’ என்று விளக்கமளித்திருக்கிறார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அந்நாட்டு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜூன் ரணதுங்கா, தற்போது அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சனத் ஜெயசூர்யா, இணையமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored