இந்திய மகளிர் அணிக்குப் பயிற்சியாளரான முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்!Sponsoredஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக ரமேஷ் பாவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Photo Credits: BCCI

Sponsored


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த துஷார் அரோத், கடந்த ஜூலை மாதத்தில் ராஜினாமா செய்தார். அவரது பயிற்சி முறைகளில் திருப்தி இல்லாததாக அணியின் சீனியர் வீராங்கனைகள் சிலர், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ) நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து, பி.சி.சி.ஐ நிர்வாகக் குழு, இந்திய வீராங்கனைகளிடம் நடத்திய விசாரணையின் முடிவில் அரோத் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதேபோல், இந்திய மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரிடம் பயிற்சியாளர் குறித்து பி.சி.சி.ஐ தரப்பில் கேட்கப்பட்ட அறிக்கையிலும், அவர்கள் பயிற்சி முறைகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, பயிற்சியாளர் பதவியில் பதவி விலகுமாறு துஷாரிடம் பி.சி.சி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். 

Sponsored


இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவாரை பி.சி.சி.ஐ நியமித்திருக்கிறது. அவர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை நீடிப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் ஆகிய தொடர்களில் இந்திய அணி, ரமேஷ் பவாரின் பதவிக் காலத்தில் விளையாடும். இந்திய அணிக்காகக் கடந்த 2004 முதல் 2007 வரையில் விளையாடிய ரமேஷ் பவார், 2 டெஸ்ட், 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.Trending Articles

Sponsored