`அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்..!'- அஜித் வடேகர் மறைவுக்கு சச்சின் இரங்கல்இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர்  மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள்  எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

Sponsored


இடது கை பேட்ஸ்மேனான அஜித் வடேகர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 14 அரை சதங்கள் விளாசியுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக இவர் அடித்த சதம், ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பு மிக்கது. 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தப் போட்டியில், வடேகரின் சதத்தால் 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. 1974-ம்  ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதன்பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துவந்தார். இவர், இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளார்.  உடல்நலக் குறைவால், மும்பை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அஜித் வடேகர்(77),  நேற்று காலமானார். 

Sponsored


Sponsored


அவரின் மறைவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆட்ட நாயகனாகவும் விளங்கிய சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், `அஜித் வடேகர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். 90-களில் விளையாடிய வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர முக்கியப் பங்காற்றியவர். அவருடைய அறிவுரையிலும் வழிகாட்டுதலிலும் நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், துயரத்தைத் தாங்கிக்கொள்ள இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored