ஐ.சி.சி அட்டவணையில் மாற்றமில்லை - திட்டமிட்டபடியே ஆசியக் கோப்பை கிரிக்கெட்!



Sponsored



ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணைக்கு எதிர்ப்புகள் எழுந்தபோதும் அதில் மாற்றம் செய்யாமல் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

@bcci

Sponsored


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த அட்டவணையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அடுத்தடுத்த நாள்கள், அதாவது செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இருக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி முதல் மூன்று நாள்கள் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெறும் அணியைச் செப்டம்பர் 18-ம் தேதி எதிர்கொள்ளும் இந்திய அணி, அதன்மறுநாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆனால், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு ஒரு நாள் கால இடைவெளி அளிக்கப்படுகிறது. இந்த அட்டவணை பெரும் சர்ச்சையைச் சந்தித்தது. இந்திய அணிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். 

Sponsored


முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ``வெப்பம் தகிக்கும் துபாய் மைதானத்தில் அடுத்தடுத்த நாள்களில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையது. இதனால், இந்தத் திட்டமிடல் சரியானது இல்லை. ஆசியக் கோப்பை தொடர் குறித்து நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். அந்தத் தொடரில் விளையாட வேண்டாம்" எனப் பகிரங்கமாக கூறினார். தொடர்ந்து கண்டனக்குரல்கள் எழுந்ததால் அட்டவணை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அட்டவணையில் மாற்றம் செய்யப்படாமல் திட்டமிட்டபடியே போட்டி நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவரான ஷேக் நஹ்யானும், ஐ.சி.சி. அதிகாரியும் போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்மூலம் அட்டவணையில் மாற்றம் இல்லாமல் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.



Trending Articles

Sponsored