பைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர்! - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. 

Sponsored


18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவில் இருந்து 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். 

Sponsored


Sponsored


ஜகார்த்தாவில் உள்ள ஜி.பி.கே அரங்கில், 18-வது ஆசியக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதாக இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். அவர் பேசுகையில், `ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், முதல்முறையாக இரண்டு நகரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன’ என்று குறிப்பிட்டார். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பெங்க் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து அசத்தினார், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ. 

போட்டிகளை நடத்தும் இந்தோனேசிய வீரர்கள் முதலில் வர, அதன்பின்னர் மற்ற நாட்டு வீரர்கள் ஒவ்வொரு அணியாக அரங்கத்தை வலம் வந்தனர். இந்திய தேசியக் கொடியை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தாங்கிய வண்ணம் முன்னணியில் நடக்க, அவர் பின்னால் நம் நாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுத்து வந்தனர். இந்தோனேசியாவின் வரலாறு மற்றும் கலாசாரம் ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் நடனக் கலைஞர்கள் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

ஜகார்த்தாவின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஜி.பி.கே ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும், ஸ்டேடியத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரைகளிலும் தொடக்க விழா நிகழ்ச்சிகளை அங்கு கூடியிருந்த மக்கள் கண்டுகளித்தனர். Trending Articles

Sponsored