பாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை! - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsIndஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Sponsored


Photo Credit: ICC

Sponsored


நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கிய இந்திய அணி, 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 29 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே மற்றொரு தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். 

Sponsored


இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். கேப்டன் ஜோரூட் 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 10, பேரிஸ்டவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்து அசத்திய கிறிஸ் வோக்ஸ், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

கடைசி விக்கெட்டுக்கு ஆண்டர்சனுடன் ஜோடி சேர்ந்து ஜோஸ் பட்லர் சிறிதுநேரம் அதிரடி காட்ட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 150ஐக் கடந்தது. 38.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், அறிமுகப் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார். Trending Articles

Sponsored