ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம்! - வினேஷ் போகத் சாதனை



Sponsored



ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் மல்யுத்த பிரிவில் இந்தியாவைச் சேரந்த வினேஷ் போகத், தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 11,000-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். அடுத்த மாதம் 2-ம் தேதி முடிவடையவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா தனது இரண்டாவது தங்கத்தைப் பதிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ எடை ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று, நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார். இந்நிலையில் அடுத்த அதிரடியாக, பெண்கள் மல்யுத்தப் போட்டியின் ஃப்ரி ஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி இரியை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியின், தொடக்கம் முதலே வினேஷ் போகத் ஆதிக்கம் செலுத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில், ஜப்பானைச் சேர்ந்த யூகியை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார் வினேஷ் போகத். இதன்மூலம், ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் வினேஷ் போகத்.

Sponsored



 

Sponsored




Trending Articles

Sponsored