ஆல் -ரவுண்டராக ஜொலித்த பாண்ட்யா; முக்கிய கட்டத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டிSponsoredபாண்ட்யாவின் ஆல் ரவுண்டர் பெர்பார்மன்ஸ் மற்றும் கோலியின் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி.

Photo: Twitter/BCCI

Sponsored


இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, பாண்ட்யாவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 

Sponsored


அதன் பின்னர் 168 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தவான் மற்றும் ராகுல் சிறப்பான தொடக்கம் அளித்தனர். அதன் பின்னர் வந்த கோலி மற்றும் புஜாரா நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடினர். பொறுமையாக விளையாடிய புஜாரா 72 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 23-வது சதத்தை அடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார். முன்னதாக களமிறக்கப்பட்ட ரிஷப் பண்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் பாண்ட்யா அதிரடியாக விளையாட இந்தியா 500 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இறுதியாக இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. பாண்ட்யா 52 ரன்களுடனும், அஷ்வின் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். 

Photo: Twitter/BCCI

இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிபெற 521 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ஜென்னிங்ஸ் மற்றும் குக் ஆகியோர் களமிறங்கினர். 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23  ரன்கள் எடுத்ததுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 498 ரன்கள் தேவை. இந்தியா அணி வெற்றிபெற 10 விக்கெட்டுகள் தேவை. நாளை நடக்க இருக்கும் 4-ம் நாள் ஆட்டம் இரண்டு அணிகளுக்கு மிக முக்கியம். Trending Articles

Sponsored