ஆசிய விளையாட்டுப் போட்டி - துப்பாக்கிச் சுடுதலில் அசத்திய 16 வயது இந்திய சிறுவன்!Sponsored18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சேத்ரி மற்றும் அபிஷேக் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். தொடக்கச் சுற்றுகளில் இந்திய வீரர்கள் சற்று பின் தங்கியே இருந்தனர். சவுரப் தொடக்கத்தில் சீன வீரருக்கு அடுத்தபடியாக இருந்தார். பின்னர் எழுச்சிக்கண்ட சவுரப் முன்னோக்கிச் சென்றார். இவருக்கும் ஜப்பான் வீரர் டோமோயுகி மட்சுடாவுக்கும் (Tomoyuki Matsuda) இடையே போட்டி நீடித்தது. இந்தப் போட்டியில் 240.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.16 வயதேயான சவுரப் சவுத்ரி ஆசியப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 239.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்பிடித்த ஜப்பான் வீரர் டோமோயுகி மட்சுடா வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored