‘வினேஷ் போகத் ஒரு வெற்றி இரண்டு சாதனை’- சச்சின் வாழ்த்து



Sponsored



ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சி்ன் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றுவருகிறது. இதில், மல்யுத்தப் போட்டியில் ஃப்ரீ ஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆசிய விளையாட்டுப் போட்டியில் உங்களின் சிறப்பான செயல்பாடு இந்தியாவுக்கு இரண்டு முதலிடத்தைப் பெற்றுத்தந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை மற்றும் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்ற முதல் மல்யுத்த வீராங்கனைக்கு  வாழ்த்துகள்! ” எனப் பதிவிட்டுள்ளார்.

Sponsored




Trending Articles

Sponsored