விளையாட்டின்மீது தீராக் காதல் - குழந்தைக்கு `ஏசியன் கேம்ஸ்’ எனப் பெயர் சூட்டிய இந்தோனேசியப் பெற்றோர்!



Sponsored



விளையாட்டுப் பிரியர்களான இந்தோனேசியப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு `ஏசியன் கேம்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். 

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பெங்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜகார்த்தா நகரில் கடந்த 18-ம் தேதி, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவில் இருந்து 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மல்யுத்தப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 

Sponsored


இந்த நிலையில், இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் பாலெம்பெங்க் நகரைச் சேர்ந்த யோர்டானியா டென்னி - வெரா தம்பதியினர், தங்கள் குழந்தைக்கு ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து அந்தக் குழந்தையின் தந்தை டென்னி கூறுகையில், ``போட்டிகள் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்னரே எனக்கு மகள் பிறந்துவிட்டாள். ஆனால், அவளுக்கு அபிடா (Abhida) என நாங்கள் பெயரிட்டிருந்தாலும், உப பெயர் (surname) வைக்காமல் இருந்தோம். தற்போது, ஆசியக் கோப்பை போட்டிகளின் நினைவாக அவளுக்கு அபிடா ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்டிருக்கிறோம். பாலெம்பெங்க் போன்ற நகரில், இதுபோன்ற பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடப்பது அரிதானது. இது, எங்களுக்குப் பெருமை அளிக்கும் விஷயம். இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாகவே, எங்கள் மகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டியிருக்கிறோம்’’ என்றார். 

Sponsored


குழந்தையை விளையாட்டு வீராங்கனையாக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த வெரா, `எதிர்காலத்தில் விளையாட்டின்மீது அவளுக்கு ஈடுபாடு இருப்பின், நிச்சயம் அதை நாங்கள் ஊக்கப்படுத்துவோம்’ என்றார். அதேபோல, `எதிர்காலத்தில் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதற்கும் அனுமதிப்போம்’ என்றும் டென்னி-வெரா தம்பதியினர் கூறியுள்ளனர். 
 



Trending Articles

Sponsored