ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றி - சாதனை படைத்த பெண்கள் ஹாக்கி அணிSponsored18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி கஜகஸ்தானை 21-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் 4 பேர் மூன்று கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள்.

குர்ஜித் கவுர் நான்கு கோல்களும், வந்தனா கடாரியா, நவ்நீத் கவுர் மற்றும் லிலிமா மின்ஸ் ஆகிய வீராங்கனைகள் தலா மூன்று கோல்களும் அடித்தனர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் கஜகஸ்தான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்த வெற்றி ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு 1982-ம் ஆண்டில் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி ஹாங்காங்கை 22-0 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. தற்பொழுது ஒரே ஒரு கோலில் முந்தைய சாதனையை சமன்படுத்துவதை இந்தியா தவற விட்டிருக்கிறது. தற்போது வரை பதக்கப்பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored