ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்த டீன் -ஏஜ் சிங்கங்கள்!வாழ்வின் இனிமையான சேட்டை மிகுந்த பதின் பருவங்களில் நாம் என்ன செய்து கொண்டிருந்திருப்போம்? எப்போதாவது படித்துக் கொண்டும், எப்போதும் விளையாடிக் கொண்டிருந்திருப்போம். இதேதான் அவர்களும் செய்தார்கள். டீன்ஏஜ் பையன்களுக்கே உரித்தான பயமில்லாமல் பதற்றமில்லாமல். ஆனால், கொஞ்சம் சீரியஸாக. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் திரும்பியுள்ளனர் இரு டீன்ஏஜ் சிங்கங்கள். 

Sponsored


18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா தொடர்ச்சியாக பதக்கங்கள் வென்று வருகிறது. 

Sponsored


லக்ஷய் ஷியோரன் மற்றும் சவுரப் சவுத்ரி முறையே 19 மற்றும் 16 வயதே ஆன இவர்கள் ஆசிய விளையாட்டுத் தொடரில் பல உலக சாம்பியன்களையும் ஒலிம்பிக் வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி, துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். தங்களின் `க்ரிஸ்டல் க்ளியர்’ ஷாட்களால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர் இந்த லிட்டில் சூப்பர் ஸ்டார்கள். இருபது வயதே நிரம்பாத வீரர்களுக்கு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதே  உச்சபட்ச ஆசையாக இருக்கும். ஆனால் இவர்கள் வென்றிருப்பது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில். காமன்வெல்த் சாம்பியனும் தேசிய பயிற்சியாளருமான மான்ஷர் சிங்கின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட இந்தப் பட்டாக்கத்திகள் முதன் முறையாக சர்வதேச அரங்கில் மிளிர்ந்தது. 

Sponsored


இவர்களின் பங்களிப்போடு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்றது இந்தியா. அடுத்த இரண்டு மாதங்களில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என அடுத்தடுத்து ஆச்சர்யம் அளிக்கின்றனர் இந்த ஜூனியர் சிங்கங்கள். இவர்களின் வெற்றி குறித்து பேசிய 2014 காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற நாஞ்சப்பா, ``முடிவு பற்றி இவர்கள் கவலைப்பட்டதே இல்லை. அதனால்தான் இவர்களால் இத்தகைய வெற்றி பெற முடிந்தது. அவர்களிடமிருந்து நானும் அதிகம் கற்றுக்கொள்கிறேன்" எனப் பெருமிதம் பொங்கினார்.

இந்த இரண்டு வீரர்களின் அடுத்த இலக்கு என்னவென்று கேட்டால் 2020 டோக்கியோ என்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர். இந்திய விளையாட்டின் எதிர்காலம் இவர்களின் துப்பாக்கி முனையில் இருப்பதாக நம்பிக்கை கொள்கின்றனர் விளையாட்டு விமர்சகர்கள். Trending Articles

Sponsored