'கலகலனு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு' - சென்னை தினத்துக்கு ஹர்பஜன் சிங் அசத்தல் வாழ்த்து!Sponsored'கலகலன்னு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு' என்று சென்னை தினத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதிதான், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக ஒப்பந்தம் செய்தது. அந்த நாள், ஆண்டுதோறும் 'சென்னை தினம்' என்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று 379-வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. பலரும் சென்னை தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sponsored


அந்த வகையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை தினத்துக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், 'கலகலனு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு. பரபரப்ப பாரு, இங்க மக்கள் கூட்டம் ஜோரு, ஐ.பி.எல்னு அந்தப் பக்கம் வந்தோம் ஒரு நாளு, அது செம தாறு மாறு. என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு... இன்னைக்கு ஊருக்கு 379-வது பிறந்தநாள்  வாழ்த்துகள் சொல்லிக்குறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored