ஐசிசி தர வரிசையில் மீண்டும் முதலிடம்!- சாதித்த விராட் கோலிSponsoredஐசிசியின் டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

@ICC

Sponsored


இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பௌலர்களின் பங்களிப்பில் டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி. இதனால் உற்சாகத்தில் இருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றிக்கு இந்திய கேப்டன் விராட் கோலியின் பங்கு அதிகமாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தொடரில், இங்கிலாந்தில் சொதப்பியதற்கு மாறாக இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிவருகிறார். இதுவரை நடந்த 3 போட்டிகளில், இரண்டு சதம், இரண்டு அரை சதம் என உச்சக்கட்ட பார்மில் உள்ளார். இதற்கிடையே, டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடித்திருந்த விராட், லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்ததால், இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 

Sponsored


இந்நிலையில், டிரென்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இரு இன்னிங்ஸிலும் முறையே 97, 103 ரன்கள் என மொத்தம் 200 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இன்று வெளியிடப்பட்ட ஐசிசி-யின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தர வரிசையில், விராட் மீண்டும் முதலிடம் பிடித்தார். 937 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் விராட் கோலி 937 புள்ளிகளைப் பெற்றது இதுவே முதல்முறை ஆகும்.Trending Articles

Sponsored