ஜகார்த்தாவில் அதிர்ச்சி: ஹாக்கியை போல் கபடியிலும் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?சிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தைக் கோட்டை விட்டுள்ளது. 

Sponsored


ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1990-ம் ஆண்டு கபடி விளையாட்டு சேர்க்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய ஆடவர் அணி கபடிப் போட்டியில் தங்கம் வென்று வந்தது. சமீப காலமாக இரான் அணி ஆசிய அளவில் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடி வந்தது.  2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இரான் அணிதான் இந்திய அணியுடன் தங்கப்பதக்கத்துக்கு மோதி தோல்வி கண்டது. கொஞ்சம் கொஞ்சமாக கபடி ஆட்டத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வந்த இரான் அணி இந்தியாவை தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளது. 

Sponsored


ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசியப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இரான் அணி இந்திய அணியை 27-18 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.  இரான் அணி இறுதிப் போட்டியில் தென்கொரியா அணியுடன் பலப்பரீட்டை நடத்துகிறது. தென்கொரிய அணியும் லீக் சுற்றில் இந்திய அணியை 24-23 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்திருந்தது. ஆக ... கபடி விளையாட்டில் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணி தற்போது கபடியிலும் தோல்வியை தழுவத் தொடங்கியிருக்கிறது. 

Sponsored


ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டிலும் இந்திய அணி கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை கற்றுக்கொண்ட பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இப்போது ஹாக்கி விளையாட்டில் இந்திய அணியால் கூட வெல்ல முடியாத அணிகளாக திகழ்கின்றன. Trending Articles

Sponsored