ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தங்கம்! #AsianGames2018ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் போபண்ணா, திவிஜ் ஜோடி தங்கம் வென்றுள்ளது. 

Sponsored


இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய படகோட்டுதல் அணிச் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றது. ஆண்கள் 'Quadruple sculls' போட்டியில் சவர்ன் சிங், தத்து பொக்கானல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் அடங்கிய அணி 6:17.13 என்ற நேரத்தில் இலக்கை அடைந்து தங்கம் வென்றது. 

Sponsored


இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி கஜகஸ்தான் ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய போபண்ணா ஜோடி, 6-3 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்த ஜோடி வெற்றிபெற்றது இதுவே முதல்முறையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored