`நேற்று டென்னிஸ்; இன்று ஸ்குவாஷ்' - ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் இந்திய வீரர்கள்!Sponsoredஇந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் சாதித்து வருகின்றனர். 19ம் தேதி முதல் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இந்தியா சார்பில் 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். ஆசிய விளையாட்டில் சீனா, ஜப்பான் நாடுகளின் ஆதிக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்களும் சாதனை புரிந்து வருகின்றனர். அந்தவகையில் டென்னிஸ், பளு தூக்குதல், கபடி, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். 

இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதக்கம் வென்றனர். கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியும், ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பல்லிகல் இன்று வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அரையிறுதியில் மலேசியாவின் நிகோலிடம் அவர் தோல்வியடைந்ததால் வெண்கலம் கிடைத்தது. இதேபோல் மற்றொரு இந்திய ஸ்குவாஷ் நட்சத்திரமான ஜோஷ்னா சின்னப்பா பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் மலேசிய வீராங்கனை சிவசங்கரியிடம் தோல்வியடைந்தார். இதனால் இவருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மேலும், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஹாங்காங் வீரரை எதிர்கொண்ட இந்தியாவின் சௌரவ் கோஷல் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 

Sponsored


முன்னதாக நேற்றைய ஆசிய விளையாட்டில் டென்னிஸில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இரட்டையர் பிரிவில் நேற்று ரோஹன் போபண்ணா - டி விஜ் சரண் தங்கமும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியது குறிப்பிடப்பதக்கது. இதற்கிடையே பேட்மிண்டன் விளையாட்டில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தியாவின் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored