ஆசியப்போட்டிகளில் அசத்தும் இந்தியா! - குண்டு எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்பால்ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா ஏழாவது தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.

Sponsored


இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் சாதித்து வருகின்றனர். 19ம் தேதி முதல் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இந்தியா சார்பில் 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். ஆசிய விளையாட்டில் சீனா, ஜப்பான் நாடுகளின் ஆதிக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்களும் சாதனை புரிந்து வருகின்றனர்.

Sponsored


 டென்னிஸ், பளு தூக்குதல், கபடி, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.  அந்த வகையில்  குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி, இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் புதிய சாதனை படைத்துள்ளார்.  இதன் மூலம் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தங்கம் வென்ற வீரர் தஜிந்தர்பால் சிங் தூர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Sponsored
Trending Articles

Sponsored