`கிரிக்கெட் உபகரணங்கள் தயாரிப்பில் பாலின சமத்துவம்!’ - கூக்கபரா நிறுவனத்தை நெகிழவைத்த 11 வயது சிறுமி



Sponsored



கிரிக்கெட் விளையாட்டின் போது பயன்படுத்தப்படும் பேட் (pad) பாலின சமத்துவத்துடன் தயாரிக்கக் கோரி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கிரிக்கெட் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கூக்கபரா நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 

Photo Credit: ICC

Sponsored


சிறுமியின் அந்த கடிதத்தை ஆஸ்திரேலியாவின் புலிம்பா கிரிக்கெட் கிளப் (Bulimba Cricket Club), தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவே, அந்தக் கடிதம் வைரலாகி வருகிறது. ஹீட் கேர்ள்ஸ் லீக் அணியில் விளையாடும் 11 வயதான ஒலிவியா எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், 

Sponsored


``அன்புள்ள கூக்கபரா , 
என்னுடைய பெயர் ஒலிவியா. 11 வயதாகும் எனக்குக் கிரிக்கெட் விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம். கடந்தாண்டின் கோடைகாலம் முதல் பெண்கள் அணியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. சமீபத்தில் எனது பிறந்தநாளின் போது, ரிபெல் (rebel) நிறுவனத்தின் கிஃப்ட் வவுச்சர் எனக்குக் கிடைத்தது. இதையடுத்து, ரிபெல் நிறுவனத்துக்குச் சென்று கூக்கபரா வெர்வ் ப்ரோ 400 (Kookaburra Verve Pro 400) மாடலில் , சிறுவர்களுக்கான (Boys) பிரிவில் பேட்டிங் பேட்களை வாங்க நான் இன்று சென்றிருந்தேன். பெண்கள் கிரிக்கெட் அபாரமாக வளர்ச்சியடைந்து வரும் சூழலில் குறிப்பாக பெண்களுக்கென பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது மற்றும் பெண்களுக்காக ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றிருக்கும் இந்த சூழலில் பேட்கள் சிறுவர்கள் (boys) மற்றும் குழந்தைகள் (kids) என வகைப்படுத்தப்பட்டிருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஆஸ்திரேலிய வீராங்கனை ஆலிஸா ஹீலே கோக்குபாரா கிரிக்கெட் கிட்தான் பயன்படுத்துகிறார். அவர் மிகச்சிறந்த ரோல் மாடல் என்பதால், நானும் கோக்குபாரா கிரிக்கெட் கிட் பயன்படுத்த எண்ணினேன். 

Photo Credit: Twitter/@BulimbaCricket

அதேபோல், கூக்கபரா நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள பயிற்சி என்ற பிரிவின் கீழ் 20 வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் மட்டுமே பெண் பயிற்சியாளர்கள் தோன்றி பயிற்சி அளிக்கிறார்கள். இனிவரும் காலங்களில் கூக்கபரா நிறுவனத்தின் பெண் பயிற்சியாளர்கள்  அதிகம்பேர் பயிற்சி அளிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். 
தங்கள் உண்மையுள்ள,’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. 

சிறுமி ஒலிவியாவின் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள கோக்குபாரா நிறுவனம், சிறுவர்கள் (Boys) மற்றும் ஆண்கள் (Mens) பிரிவுகளுக்குப் பதிலாக ஜூனியர்ஸ் மற்றும் அடல்ட்ஸ் (Adults) என மாற்றம் செய்துவிட்டதாகவும், அவர் பழைய முறையில் உள்ளவற்றைப் பார்த்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது. அதேநேரம், இந்த மாற்றம் எவ்வளவு முக்கியம் என்று உங்கள் கடிதம் உணர்த்தியிருக்கிறது என்றும் கோக்குபாரா நிறுவனம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது. 
 



Trending Articles

Sponsored