`20 ஆண்டுகளில் முதல் பதக்கம்!’ - மகளிர் 100 மீட்டர் தடகளத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்த்



ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீட்டர் தடகளப் போட்டியில், இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி வென்றார். 

Sponsored


ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பெங்க் நகரங்களில் நடந்துவருகின்றன. இன்றைய போட்டியில், இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 400 மீட்டர், மகளிர் 100 மீட்டர் தடகளப் போட்டிகளில் வீரர்கள் பதக்கம் வென்றனர். பாலினம்குறித்த சர்ச்சையில் சிக்கிய அந்தப் பிரச்னையிலிருந்து மீண்ட டூட்டி சந்த், 100 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளி வென்று சாதித்தார். ஆசியப் போட்டியின் 100 மீ தடகளப் பிரிவில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். பந்தய தூரத்தை அவர் 11.32 விநாடிகளில் கடந்தார். பஹ்ரைனின் எடிடியாங் தங்கமும், சீனாவின் வீ யாங்க்லி வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

Sponsored


Sponsored


அதேபோல, மகளிர் 400 மீட்டர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை ஹிமா தாஸ், 50.59 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது, தேசிய அளவில் சாதனையாகும். அதேபோல, ஆண்கள் 400 மீட்டர் தடகளப் போட்டியில் பந்தய தூரத்தை 45.69 விநாடிகளில் கடந்த முகமது அனஸ், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்திய அணி 36 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இதில், 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். 



Trending Articles

Sponsored