ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சிந்து சாதனை!இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

Sponsored


இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற பேட்மின்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்கொண்டார். இந்தியாவின் சாய்னா நேவால், அரையிறுதியில் தாய் சூ யிங் யிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.   

Sponsored


இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிந்து வெற்றிபெற்று பேட்மின்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய  வீராங்கனை என்ற சாதனையைப் படைப்பார் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆட்டம் தொடங்கியது முதலே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சூ யிங் கின் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். முதல் செட்டை அவர் 21 - 13 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும்  அபாரமாக விளையாடிய தாய் சூ யிங் 21 - 16 என்ற புள்ளிகளில் கைப்பற்றித் தங்கப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 

Sponsored
Trending Articles

Sponsored