ஹீமா தாஸுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா? - பஹ்ரைன் வெற்றிக்கு எதிராக இந்தியா புகார்Sponsoredஇந்தோனேசியாவில், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர் பதக்கங்கள் வென்றனர். 4*400 மீட்டர் கலப்பு ரிலே ஓட்டப் பந்தயத்தில், இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில், பஹ்ரைன் அணி முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றது. 

இந்திய அணி சார்பில், முகமது அனாஸ் யாஹியா, பூவம்மா, ஹீமா தாஸ், மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் கலந்துகொண்டனர். பந்தயத்தைத் தொடங்கிய  முகமது அனாஸ் யாஹியா அபார தொடக்கத்தை அளித்தார். அவர், முதல் சுற்றில் சுமார் 30 மீட்டர் முன்னிலையுடன் கையில் இருக்கும் பேட்டனை (Baton) பூவம்மாவிடம் ஒப்படைத்தார். எனினும், இந்தத் தொடக்கத்தை பூவம்மா பயன்படுத்தத் தவறிவிட்டார். இதைப் பயன்படுத்தி, பஹ்ரைன் வீராங்கனை அடேகோயா முன்னிலைபெற்றார். 

Sponsored


Sponsored


பூவம்மா, தனது கையில் இருக்கும் பேட்டனை மூன்றாவதாக ஓடும் ஹீமா தாஸிடம் ஒப்படைத்தார். அப்போது, முதலில் ஓடிய பஹ்ரைன் வீராங்கனை, தனது பேட்டனை ஒப்படைத்த பின்னர், ஓடும் ட்ராக்கில் விழுந்தார். இதனால், இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் அவரைத் தாண்டி ஓடும் நிலை ஏற்பட்டது. இதில், ஹீமா தாஸுக்கு  சிறு காயமும் ஏற்பட்டது. இதனால், அவரால் வேகமாக ஓடமுடியவில்லை. சமீபகாலத்தில் ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓடுவதற்கு எடுக்கும் நேரத்தைவிட, நேற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டார். அதற்கு இந்தத் தடையும், அதனால் ஏற்பட்ட காயமும் காரணமாகக் கூறப்படுகிறது. இறுதியில், இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

இந்நிலையில்,  இந்திய தடகள சம்மேளனம், பஹ்ரைனின் இந்த வெற்றிக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய சம்மேளனத் தலைவர், “ஒரு தடை அல்லது இடையூறு ஏற்படுத்தப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இது, ஹீமாவுக்கு காயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அதிக நேரமும் ஆனது. அதனால், இதற்கு எதிராக மனு அளித்துள்ளோம்” என்றார். இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது. 

இது தொடர்பாக ஹீமா தாஸ் கூறுகையில், “அவர் நிலை தடுமாறி விழுந்தாரா அல்லது வேண்டுமென்றே விழுந்தாரா என்பதுகுறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் விழுந்ததால், அவரை தாண்டிச்செல்லும் நிலை ஏற்பட்டது” என்றார். 

ஹீமா தாஸ் தனது பேட்டனை ஆரோக்கிய ராஜீவிடம் கொடுத்த பின்னர், ஓடும் ட்ராக்கில் அமர்ந்துவிட்டார். இதனால், அவருக்குப் பின்னால் வந்த வீரர்கள் ஓடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், ஹீமா தாஸின் காயம் காரணமாக ஏற்பட்ட வலியால் அவர் களத்தில் அமர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  Trending Articles

Sponsored