தோனி வருகைக்குப் பணம் செலவிடப்பட்டதா? - இமாசலப்பிரதேச சட்டப்பேரவையில் அனல்பறந்த விவாதம்!



'இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வருகைக்கு, அரசு தரப்பில் பாதுகாப்பு மட்டுமே அளிக்கப்பட்டது. அதைத் தவிர அவரது வருகைக்காக மாநில அரசு ஒரு ரூபாய்கூட செலவிடவில்லை' என இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் சட்டசபையில் விளக்கமளித்தார்.  

Sponsored


Photo Credits: Twitter/@RhitiSports

Sponsored


இமாச்சலப்பிரதேச சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இன்றைய கூட்டத்தொடரின்போது, தேஹ்ரா தொகுதி எம்.எல்.ஏ., ஹோஸ்யார் சிங், தோனியின் வருகைக்கு மாநில அரசு செலவிட்ட தொகைகுறித்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர், `தோனி, மாநில அரசின் விருந்தினராகக் கருதப்படுகிறார். விளம்பரப் படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, கடந்த 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 5 நாள்கள் சிம்லாவில் தங்கியிருக்கிறார். மாநில அரசு சார்பில் அவருக்குப் போதிய பாதுகாப்பு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவரைப் போன்ற முக்கியமான மனிதர்களுக்கு அது அவசியமானது. அதைத் தவிர, மாநில அரசு சார்பில் தோனியின் வருகைக்காக ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்’’ என்று விளக்கமளித்தார். 

Sponsored


தோனியின் வருகைக்காக மக்களின் வரிப்பணத்தை இமாச்சலப்பிரதேச அரசு செலவிடுவதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இந்த நிலையில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இவ்வாறு விளக்கமளித்திருக்கிறார். சட்டசபையின் உணவு இடைவேளைக்குப் பின்னர், இந்த விவகாரம்குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுக்விந்தர்சிங் சுகு, தோனியை மாநில அரசின் விருந்தினராகக் கருதுவது குறித்தோ அல்லது அவரது வருகைக்காக அரசு பணம் செலவிடப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்பவில்லை என்று கூறினார். மேலும், மற்ற விளம்பரப் படங்களின் படப்பிடிப்புக் குழுவினரிடம் வசூலிப்பதுபோல, தோனி கலந்துகொண்ட விளம்பரப் படத்தின் குழுவிடமும் மாநில அரசு உரிய கட்டணத்தை வசூலித்ததா என்பது குறித்துதான் கேள்வி எழுப்பப்பட்டதாக அவர் கூறினார். 



Trending Articles

Sponsored