ஹெப்டத்லான் போட்டியில் வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்றார் - 9-வது இடத்தில் இந்தியா!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதில், ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Sponsored


18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்றுவருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்துவருகின்றனர். 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுகளை உள்ளடக்கியது ஹெப்டத்லான் போட்டி. இந்த 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாகச் செயல்பட்டு, அதிகப் புள்ளிகளைப் பெறுபவருக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். அந்த வகையில், இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று, பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தன.

Sponsored


Sponsored


 நடந்த 6 பந்தயங்களின் முடிவில், ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியது. மற்றொரு இந்திய வீராங்கனையான பூர்ணிமா 5001 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருந்தார். முதலிடத்தில் இருந்த ஸ்வப்னா, தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு சற்று நேரத்தில் பூர்த்தியானது. அதன்படி, ஹெப்டத்லான் போட்டியில் கடைசிப் பந்தயமான 800 மீட்டர் ஓட்டத்தில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் அவருக்கு தங்கம் உறுதியானது. ஒட்டுமொத்தமாக 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.Trending Articles

Sponsored