ஆசிய விளையாட்டுப்போட்டி - ட்ரிபிள் ஜம்ப்பில் தங்கம் வென்று சாதனை படைத்தார், அர்பிந்தர் சிங்!ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் அர்பிந்தர் சிங் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்,

Sponsored


18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்றுவருகின்றன. இதில், இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்துவருகின்றனர். நேற்று நடைபெற்ற தடகளப் போட்டியில்,  ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்பிள் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனர். இதையடுத்து, இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து, தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தார்.

Sponsored


Sponsored


இதில், உஸ்பெகிஸ்தான் வீரர் குர்பனோவ் (16.62மீ) வெள்ளியும், சீன வீரர் சாவ் ஷுவோ (16.56 மீ) வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர்  ராகேஷ் பாபு (16.40 மீ) ஆறாவது இடத்தைப் பிடித்தார்.  தங்கம் வென்ற அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், `கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங், ஆசியப்போட்டி ட்ரிபிள் ஜம்ப்பிள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால், ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர்''என  ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.Trending Articles

Sponsored