மாற்றம் செய்யப்படாத இந்திய அணி - 4 வது டெஸ்டில் இங்கிலாந்து அணி பேட்டிங்!



இந்திய அணிக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. 

Sponsored


இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சௌத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. முன்னதாக நடைபெற்ற டி-20 தொடரை இந்தியாவும் ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் களம் இறங்கவுள்ளது.  

Sponsored


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் கிரிஸ் வோக்ஸ்க்கு பதிலாகக் குரான் சேர்க்கப்பட்டுள்ளார். மொயீன் அலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற கருத்து நிலவியதால் இந்திய அணியில் ஜடேஜா சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Sponsored




Trending Articles

Sponsored