``நான் அவரின் ரசிகனாகிவிட்டேன்'' - ஸ்வப்னா பர்மன் குறித்து நெகிழும் சேவாக்`ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மனின் ரசிகனாகிவிட்டேன்' என நெகிழ்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். 

Sponsored


இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18 வது தேசிய விளையாட்டுப்போட்டியில், நேற்று நடந்த ஹெப்டத்லான் போட்டியில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். இதன்மூலம், 'ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை' என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்வப்னாவின் தந்தை சைக்கிள் ரிக்ஷா தொழிலாளியாக இருந்தவர். 8 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவரின் சகோதரர் வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்

Sponsored


இப்படியொரு கடினமான சூழலில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்வப்னாவுக்குப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஸ்வப்னா தங்கம் வென்றபோது அவரின் தாயார் அழுத வீடியோ காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டு, ``இரண்டு கால்களிலும் 6 விரல்கள், தாடையில் கட்டு, ரிக்ஷா ஓட்டுநரான அப்பா உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களுக்கு மத்தியில் ஸ்வப்னா வெற்றிபெற்றதை அறிந்தது முதல் அவரின் ரசிகராகிவிட்டேன். ஸ்வப்னா தங்கம் வென்றதும் அவரின் தாய், கடவுளுக்கு நன்றி சொல்வதைப் பாருங்கள்" என நெகிழ்கிறார் சேவாக். 

Sponsored
Trending Articles

Sponsored