`அன்று வெள்ளி; இன்று தங்கம்' - ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்! #AsianGames2018



Sponsored



ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று முன்தினம் ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள் இன்று மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் சீனா, ஜப்பான் நாடுகளின் ஆதிக்கத்துக்கு மத்தியில் குறிப்பிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்களும் சாதனை புரிந்து வருகின்றனர். டென்னிஸ், பேட்மின்டன், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றார். இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான மஞ்சித் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்று அசத்தினார். மேலும், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், பூவம்மா ராஜு, சரிதா பென் லக்ஷ்மண் பாய், விஷ்மயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. இதேபோல் ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்திலும் தமிழக வீரர் தருண் அய்யாசாமி, குன்கூ முகமது, முகமது அனஸ், ராஜீவ் ஆரோகியா அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதன்மூலம், 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப்பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதேபோல் 59 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 8-ம் இடத்தில் உள்ளது. 

Sponsored


முன்னதாக நேற்று முன்தினம் நடந்த ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மஞ்சித் சிங் 1:46.15 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன் 1:46.35 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆனால், இன்று 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜின்சன் ஜான்சன் தங்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதேபோல் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனஸ், ஹிமா தாஸ், ராஜீவ் ஆரோகியா, பூவம்மா ராஜு ஆகியோர் ஏற்கெனவே வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Sponsored




Trending Articles

Sponsored