ஹாக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!



Sponsored



ஆசியப் போட்டியில், ஆண்களுக்கான ஹாக்கி அரையிறுதியில் பெனால்டி ஷூட் முறையில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது நடப்பு சாம்பியனான இந்திய அணி. இதன்மூலம்  2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் இந்தியாவின் கனவு கலைந்தது.

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசியவிளையாட்டுப் போட்டிகளில், நேற்று, ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் இந்தியா, மலேசிய அணிகள் மோதின. விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில்,  இரு அணிகளும் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர தீவிரம் காட்டின. மலேசிய வீரர்கள் பலமுறை இந்திய கோல்பகுதிக்கு வந்து கோலடிக்க முயன்றதை, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாகத் தடுத்தார். இரு அணிகளும் மாறி மாறி கோலடிக்க முயன்றனர். யாரும் கோலடிக்காத நிலையில், முதல்  பாதி 0-0 என்ற நிலையில் முடிந்தது. இரண்டாம் பாதி தொடங்கியதும் இந்திய அணி வேகத்தைக் கூட்டியது.

Sponsored


Sponsored


இந்தியாவின் ஹர்மன் ப்ரீத் கோல் அடித்து, ரசிகர்களிடையே உற்சாகத்தைக் கூட்டினார். பின்னர், வருண் அடித்த கோலால் 2-0 என்ற கணக்கு நிலவியது. பதில் தாக்குதலில் இறங்கிய மலேசியாவின் வீரர்கள் ப்ட்ரீ மற்றும் ரேசி ரஹீம் கோலடிக்க, கோல் கணக்கு 2-2 என்ற சமநிலையை எட்டியபோது ஆட்ட நேரம் முடிந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.  இதில், 6-7 என்ற கணக்கில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது இந்தியா.

இதனால், இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்து. நாளை, வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசிய போட்டியில் வெற்றிவாகை சூடும் அணி, 2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நேரடித் தகுதி பெறும். அந்த வாய்ப்பை தவறவிட்டது இந்தியா. நடப்பு சாம்பியனான இந்தியா, தன்னைவிட வலு குறைந்த அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 



Trending Articles

Sponsored