புஜாரா விளாசல்; தடுமாறிய இங்கிலாந்து; முன்னிலையில் இந்திய அணி!



Sponsored



இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு, புஜாரா சதம் அடித்தார்.

PC : ICC

Sponsored


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கெதிரான, 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளில், 2 டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான 4–வது டெஸ்ட் போட்டி, சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் நேற்று  தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸின் முடிவில் 246 ரன்களை எடுத்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று, ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, தவான், ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றத்தையளித்தது. அடுத்ததாகக் களமிறங்கிய கோலி, 46ரன்களைக் குவித்து அணிக்கு நம்பிக்கையூட்டினார்.

Sponsored


PC : ICC

அடுத்து வந்த ரகானே (11), பண்ட் (0), பாண்டியா (4), அஷ்வின் (1), ஷமி (0), இஷாந்த், வந்த வேகத்தில் வெளியேறினர். சரிவிலிருந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார் புஜாரா. இங்கிலாந்து பௌலர்களுக்கு கடும் சவாலாகத் திகழ்ந்த அவர், தனது 15-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 132 ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய அணி 27 ரன்கள் முன்னிலைபெற்றது. இதைத்  தொடர்ந்து, 6ரன்களுடன் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து களத்தில் உள்ளது. இதனிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவுக்கு, சச்சின், லக்ஷ்மனன், உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



Trending Articles

Sponsored