விராட் கோலி இல்லாத இந்திய அணி; ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்கள் அறிவிப்பு



ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Sponsored


இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. இந்த முறை ஆசியக் கோப்பை தொடர் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

Sponsored


இந்திய அணி தனது முதல் போட்டியில் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் செப்டம்பர் 18-ம் தேதி மோதவுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அனைத்து விதமாக கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Sponsored


கேப்டன் கோலி இல்லாத நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். கோலிக்குப் பதிலாக ஒன்-டவுன் பொசிஷனில் கே.எல் ராகுல் களமிறங்குவார் எனத் தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பர்களாக தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் உள்ளனர். அஷ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குல்தீப் யாதவ், சஹால், அக்‌ஷார் பட்டேல் ஆகியோர் அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷரதுல் தாக்கூர், பாண்ட்யா ஆகியோர் அணியில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.  

இந்திய அணியில் முழு விவரம்: ரோகித் ஷர்மா (கேப்டன்), தவான், கே.எல் ராகுல், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சஹால், அக்‌ஷார் பட்டேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷரதுல் தாக்கூர், கலீல் அஹ்மது.  



Trending Articles

Sponsored