ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் அமீத்!சிய விளையாட்டுக் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் ஹஸன்பாய் டஸ்மாடோவை வீழ்த்தி இந்திய வீரர் அமீத் பங்கல் தங்கம் வென்று சாதித்துள்ளார். 

Sponsored


49 கிலோ எடைப் பிரிவில் இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தினார் அமீத் பங்கல். உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் டஸ்மாடோ 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தப் பிரிவில் தங்கம் வென்றவர். கடந்த ஆண்டு ஹம்பர்க்கில் நடந்த உலகச் சாம்பியனுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார். 

Sponsored


எனவே, இந்தப் போட்டியில் டஸ்மோடாவ் வெல்வார் என்றே கணிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அமீத், கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் குத்துக்களை இறக்கினார். முடிவில் ஒலிம்பிக் சாம்பியனை மண்ணைக் கவ்வச் செய்து, அமீத் தங்கம் வென்றார். பெரும்பான்மை நடுவர்களின் முடிவின் (3-2) அடிப்படையில் அமீத்துக்கு தங்கம் அறிவிக்கப்பட்டது. இதே டஸ்மோடாவிடம் ஹம்பர்க்கில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் தொடரில் அமீத் தோற்றிருந்தார். இதனால் அமீத்துக்கு இந்தத் தங்கம் ஸ்பெஷல். 

Sponsored


ஆசியப் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 22 வயது ராணுவ வீரரான அமீத் பங்கல் களம் இறங்கியதும் இதுவே முதன்முறை. ஆசியப் போட்டியில் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற 8-வது இந்திய வீரர் இவர். ஆசியப் போட்டியில் 2010-ம் ஆண்டு அதிகபட்சமாக இந்தியா 14 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்றிருந்தது. ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 15 தங்கங்களை அதிகபட்சமாக இந்தியா வென்றுள்ளது.15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் இந்தியா, பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.Trending Articles

Sponsored