அதிரடி காட்டிய பட்லர்! - இந்தியாவை விட 233 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்துசவுத்தாம்டனில் நடைபெற்றும் வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாளில் ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

Sponsored


PC : ICC

Sponsored


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கெதிரான, 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளில், 2 டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான 4–வது டெஸ்ட் போட்டி, சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸின் முடிவில் 246 ரன்களை எடுத்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி,  273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா அதிகபட்சமாக 132 ரன்களுடன் குவித்தார்.

Sponsored


PC : ICC

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய அணி 27 ரன்கள் முன்னிலைபெற்றது. இதைத்  தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். குக் 12 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 36 ரன்னிலும், மொயின் அலி 9 ரன்னிலும், ஜோ ரூட் 48 ரன்னிலும், பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்பாக ஆடி அரை சதமடித்ததுடன், 69 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. சாம் குர்ரன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர். இந்தியா சார்பில்  ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும்ம் எடுத்துள்ளனர். இங்கிலாந்து தற்போது 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 Trending Articles

Sponsored