பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை அறிவித்த முதல்வர்!Sponsoredஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 30 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். 

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா 15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், 30 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதில், மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில்  இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. அதில், தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோர் அடக்கம்.

Sponsored


Sponsored


வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா 30 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், மூவருக்கும் தனித்தனியாக வாழ்த்துக் கடிதமும் அனுப்பியுள்ளார். Trending Articles

Sponsored