`ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து பேசினால் சிறந்த ஆட்டம் வெளிப்படாது' - இந்திய அணியை விமர்சித்த சேவாக்!



Sponsored



``நல்ல வெளிநாடுகளுக்கான அணி என்பது, தமது ஆட்டத்தை மைதானத்தில் வெளிப்படுத்துவதன்மூலம்தான் உருவாகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து பேசினால் அல்ல'' என்று சேவாக் இந்திய அணியை விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. நான்காவது டெஸ்ட் போட்டியில், நூலிழையில் வெற்றியைத் தவறிவிட்டது இந்திய அணி. இது, ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்திய அணியின் தோல்விகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர். விராட்கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்தும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Sponsored


இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சேவாக், ``நல்ல ஆட்டத்தை மைதானத்தில் வெளிப்படுத்துவதால்தான் சிறந்த வெளிநாட்டுகளுக்கான அணி உருவாகிறது. மாறாக, ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்துகொண்டு பேட்டிங்கைப் பற்றி பேசுவதால் அல்ல. உங்களுடைய பேட் பேசாத வரைக்கும் நீங்கள் சிறந்த அணியாக இருக்க முடியாது'' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Sponsored




Trending Articles

Sponsored